அண்மைக்காலமாக நடிகை அமலாபால் தத்துவம் பேசி வருகிறார்!
தாய்மை என்பது கூட அவருக்கு ஆண் ஆதிக்கத்தின் விளைவாக தெரிகிறது..
இல்லற வாழ்க்கைக்கு அவர் எதிரியா ? ஆண்களை தீயாய் சுடுவதற்கு காதல் தோல்வி காரணமாக இருக்கலாமா?
இப்படியெல்லாம் சந்தேகங்கள் ஏற்படுகிறது அவரது பதிவுகளை படிக்கிறபோது!
அவர் ஓஸோவின் புத்தகங்களை வாசிக்கிறார். அதன் விளைவாகவும் இருக்கலாம்.?
என்ன சொல்கிறார் அமலாபால்?
“பல நூற்றாண்டுகளாக பெண்கள் அனுபவிப்பது வலி..வலி ..வலியேதான்!
வயிற்றில் வளரும் குழந்தையினால் அவளால் சரியாக சாப்பிட முடிகிறதா? வாய் வழியாக வாந்தியாக வருகிற உணர்வு ..
ஒன்பது மாதம் வளருகிறது பெண்ணின் வயிற்றில்! பிரசவத்தின்போது அவள் செத்துத்தான் பிழைக்கிறாள் !மறு ஜென்மம்.
அந்த ஒரு குழந்தையுடன் நின்று விடுகிறதா அவளது வாழ்க்கை ?
அதோ.. அடுத்த குழந்தைக்கு ,அவளை மறுமுறையும் தாயாக மாற்ற அவன் தயாராக இருக்கிறான்!
குழந்தைகளை பெற்றுத்தள்ளுகிற ‘பாக்டரி’யா அவள்?
ஆண் என்ன செய்கிறான் ? அவளது வலியில் பங்கேற்கிறானா?
அவனது சதைப்பசிக்கு உணவாக செக்ஸ் பொருளாகவே பார்க்கிறான்.
‘ஐ லவ் யூ சொல்வான். அந்த வார்த்தைகள் உண்மையானதா? மெய்யாக இருந்திருக்குமேயானால் மக்கள் தொகை இந்த அளவுக்கு பெருகியிருக்காதே!
பெண்கள் ஆண்களுக்கு கால்நடையாக தெரிகிறார்கள்” என்பதாக பதிவு செய்திருக்கிறார் அமலாபால்.