கொரானாவுக்குத்தான் மாஸ்க்! மனசுக்கு முகமூடி இல்லை. என்பதை போல நடிகை ஓவியா துணிவுடன் சில கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்.
பல நடிகைகள் உண்மை பேச தயங்குவார்கள். இது சினிமாவில் சகஜம். சிலர்தான் உண்மையை பகிரங்கமாக போட்டு உடைத்து விடுவார்கள்.
களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஓவியா .
தொடர்ந்து மன்மதன் அம்பு,கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், யாமிருக்க பயமே, காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய திருப்பத்தை தரும் என நம்பினார் .
பிக்பாஸ்க்கு விளம்பரம் கிடைத்ததே தவிர ஓவியாவுக்கு வாய்ப்புகளை தேடித்தரவில்லை. பல பிக்பாஸ் நட்சத்திரங்களின் உண்மையான நிலை இதுதான்!
ஓவியா நடித்த 90 எம்எல், களவாணி 2 ஆகிய படங்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.
அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்கு சினிமா, கல்வி, தொழில் என சகலமும் முடங்கி பலி ஆகிவிட்டன.
. இதனால் திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் முன்பை விட சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில், ஓவியா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
,”முதலில் கொஞ்ச நாள் நல்லா இருந்தது.ஆனால்,போகபோக போரடித்து விட்டது.
இது இன்னும் கொஞ்சம் நாள் நீடித்தால் எனக்கு பைத்தியமே பிடித்து விடும்.
நான் வெளியில போக துடிச்சுக்கிட்டு இருக்கேன்.’இந்த சமயத்தில் வீட்டில் இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
நிறைய விஷயங்களை மிஸ் பண்ணுகிறேன். எனக்கு சிலர் மாதிரி டிராமா போடத் தெரியாது.உண்மையை சொல்லணும்னா உங்க எல்லோருக்குமே தெரியும்,நான் சரக்கடிக்கிற விஷயம்.
ஆமாங்க, சரக்கை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். என்னுடைய பிறந்தநாளில் நான் பல இடங்களில் தேடி அலைந்தும், அட்லீஸ்ட் ஒரு ஒயின் பாட்டில் கூட கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டேன். என்ன மாதிரி நிறைய பேர் கஷ்டப்பட்டுக்கிட்டு இருப்பீங்க பயப்படாதீங்க”என ஆறுதல் சொல்லியிருக்கிறார்.