ஆந்திராவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரியின் மகள் நிகாரிகா .
இவர் தமிழ்ச்சினிமாவில் வளர்ந்து வருகிற இளம் நடிகர் அசோக் செல்வன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகதியை காதலிப்பதாக ஒரு செய்தி உண்டு.
பீட்சா 2, தெகிடி படங்களைத் தொடர்ந்து அசோக் செல்வன் நாயகனாக நடித்து வெளியான ஓ மை கடவுளே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது அசோக் செல்வனின் அடுத்தப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்வாதினி இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் கதாநாயகியாக நடித்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் நிஹாரிகா கொனிடெல்லா நடிக்கிறாராம் .