இது என்ன வகையான போபியாவோ? தெரியலீங்க!
இர்பான்கான் மரணம்…பெருங்குடல் புற்று நோய் காரணம்.
அடுத்து ரிஷிகபூர் மரணம்…இவரும் ஒரு வகையான புற்று நோயால் இறந்து போனார்.
அடுத்தடுத்து பாலிவுட்டை கலக்கி வந்த சோக சுனாமி நஸிருதீன்ஷா என்கிற மாபெரும் கலைஞனையும் கொண்டு போகக் காத்திருப்பதாக வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் கொரானா கொண்டு போகாதா?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற வதந்தியை அறிந்ததும் ஆடிப்போய் விட்டது பாலிவுட் பெரு உலகம்..!
மகன் விவான் ஷா அவரது டிவிட்டரில் தந்தையைப் பற்றி …..
“அப்பா நலமே…வீட்டில்தான் இருக்கிறார்..இர்பான்கான்,ரிஷிகபூர் ஆகியோரின் மறைவுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.”என்று சொல்லியிருக்கிறார்.
“எல்லோரையும் போல நானும் வீட்டில்தான் இருக்கேன்.படங்கள் பார்க்கிறேன்.புத்தகங்கள் படிக்கிறேன். என் மகனுக்கு ஷேக்ஸ் பியரின் நாடகங்களை வாசித்துக் காட்டிக் கொண்டிருக்கிறேன்.சில நேரங்களில் கிச்சனுக்கும் போவது உண்டு. கல்யாணத்துக்கு முன்னர் சமைத்தது. இப்போது நினைவு படுத்திக் கொண்டிருக்கிறேன்”என்பதாக நஸி ருதீன்ஷாவும் சொல்லியிருக்கிறார்.
இப்படி சந்தோஷமாக இருக்கிறவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பப் பார்க்கிறீங்களே !