ஆச்சார்யா பெயர் ராசி சரியில்லையா…அல்லது சிரஞ்சீவிக்கு நேரம் சரியில்லையா ,தெரியலீங்க.
எந்த கதாநாயகியும் தங்க மாட்டேன் என்கிறார்கள்.
ஆச்சார்யா படம்.பெரிய பட்ஜெட். சிரஞ்சீவி நாயகன். இவருடன் நடிப்பதற்கு முதலில் திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.பொதுவாக பெரிய கதாநாயகிகள் யாரும் கதையை கேட்காமல் ஒப்புக்கொள்வதில்லை.
என்னவோ தெரியவில்லை.சொல்லாமல் கொள்ளாமல் நடையைக் கட்டிவிட்டார் திரிஷா.
இவருக்குப்பதிலாக காஜல் ஒப்பந்தமானார். கதையைக் கேட்காமல் கான்ட் ராக்டில் கையெழுத்துப் போடுகிறவர் இவர் இல்லை.
தற்போது அந்த படத்தில் காஜலும் நடிக்கவில்லை கழண்டு கொண்டுவிட்டார் என்கிறார்கள்.
மற்றொரு தமிழ்ப்படத்திற்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்து விட்டார் .அதனால் ஆச்சார்யாவில் நடிக்கவில்லை .எல்லாம் கொரானா ஊரடங்கு உத்திரவுதான் காரணம் என்கிறார்கள் . குறிப்பிட்ட காலத்தில் படப்பிடிப்பு நடக்குமா நடக்காதா ,எப்போது லாக்டவுன் தளர்த்தப்படும் என்பது தெரியாததால் இத்தகைய வெளிநடப்புகள் நடக்கின்றன என்கிறார்கள்.
அதுசரி திரிஷா ,காஜல் இருவருமே மொத்தமாக கால்ஷீட் கொடுத்து இருப்பதாக சொல்லப்படுகிற அந்த தமிழ்ப்படம் எது ?
மணிரத்னம் தயாரிப்பா? பொன்னியின் செல்வனா?