துன்பங்களை அனுபவித்தவர் ஏசு கிறிஸ்து. இவர் சிலுவையில் உயிர் துறப்பதற்கு முதல் நாள் இரவில் தன்னுடைய சீடர்களுடன் இரவு உணவு உட்கொண்டதை மையமாக வைத்து ஒரு சுவரோவியம்.
இத்தாலியின் பிரபல ஓவியரான லியானார்டோ டாவின்சி வரைந்த ஓவியம்.
சுண்ணாம்புக் கலவைச்சாந்து பூசிய சுவரில் வரைந்த ஓவியம்.இந்த நற்கருணை ஓவியம் மிலானில் இருக்கிற அருளன்னை மரியா கோவிலில் இருக்கிறது.
இந்த ஓவியத்தை பிரதிபலிக்கின்ற மாதிரி ஒரு படத்தை நடிகர் தனுஷ் வெளியிட்டிருக்கிறார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வளர்ந்திருக்கிற ஜெகமே தந்திரம் என்கிற படத்தில் தனுஷ் மையமாக அமர்ந்திருப்பதை போல அந்த படம் இருக்கிறது. சஷி காந்த் தயாரித்திருக்கிற படம் வீண் சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி.