இயக்குநர் சேகர் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து படம் பண்ணுகிறவர் என்கிற பெயர் ,பாராட்டு அவருக்கு ஆந்திராவில் இருக்கிறது.
நடிகை சமந்தாவே அவரை பாராட்டியிருக்கிறார் . நடிகைகள் பாராட்டி இயக்குநர்களுக்கு பெயரும் புகழும் வந்து விடப்போவதில்லை. மக்கள் பாராட்டுகிறார்கள் .இயக்குநர்களின் தயவுதான் நடிக நடிகையருக்கு தேவை.
ஆனால் சில இடங்களில் ‘செல்வாக்கு’என்பது இயக்குநர்களின் கருத்தை சிதைத்து விடும் . யாருக்காகவோ இறங்கிப் போக வேண்டியதாக இருக்கிறது.சிறிய உதாரணம்.
லவ் ஸ்டோரி என்கிற தெலுங்குப்படம். இதன் நாயகன் நாக சைதன்யா. நாயகி சாய் பல்லவி. இயக்குநர் சேகர்.
படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன . எடிட்டிங் டேபிளில் உட்கார வேண்டியதுதான்பாக்கி. .சில பல காட்சிகளை ஊரடங்கு ஓய்வு பெற்றதும் எடுத்து முடித்துவிடுவார்கள் அவ்வளவு பக்காவாக இருக்கிறார்கள்.
“எடுத்தது வரை என் சம்பந்தப்பட்ட காட்சிகளை அனுப்பி வையுங்களேன் .பார்த்து விடுகிறேன்” என்று நாயகன் நாக சைதன்யா கேட்டுக்கொள்ள இயக்குநரும் ரீ ரிக்கார்டிங் செய்யப்படாத காட்சிகளை அனுப்பி வைத்திருக்கிறார்.
நாயகனின் மனைவி சமந்தாவுக்குத்தான் இடித்திருக்கிறது.
“சாய் பல்லவியின் டாமினேஷன் அதிகமாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டார்.
எந்த இயக்குநர் பெண்களுக்கு முதல் உரிமை கொடுப்பவர் என பாராட்டினாரோ அதே இயக்குநருக்கு இப்படியொரு கமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறார் சமந்தா.
இது பாராட்டா ,அல்லது வசவா என புரியவில்லை சேகருக்கு! கதைக்கு என்ன தேவையோ அதுதான் படத்தில் இருக்க முடியும். மற்றபடி ஓரவஞ்சகம் செய்வதற்கு அவசியம் என்ன இருக்கிறது.
சேகர் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்.