இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மே 3 ஆம் தேதி விதிக்கப்பட்டிருந்த லாக்டவுனை மத்திய அரசு வரும் மே 17-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.இந்நிலையில் கேரளாவில் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் சில கட்டுப்பாடுகளை மட்டும் கேரளஅரசு தளர்த்தி உள்ளது.இதில், சினிமாவுக்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளது.
இது குறித்து கேரள அமைச்சர் ஏ.கே.பாலன், ‘நாளை முதல் (4-5-2020) திங்கட்கிழமையில் இருந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை ஆரம்பித்துக்கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார். இப்பணிகளில் அதிகபட்சமாக 5 பேர் மட்டுமே சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, டப்பிங், பின்னணி இசை அமைப்பு, சவுண்ட் மிக்சிங் உள்ளிட்ட பணிகளை சில மலையாள சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் நாளைமுதல் தொடங்க உள்ளன.