பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுடன் இணைந்து சுற்றியவர் நடிகை நிதிஅகர்வால். பெயர் சொல்லிக்கொள்கிற அளவுக்கு படங்கள் இல்லையென்றாலும் ஐ ஸ்மார்ட் சங்கர் படம் இவருக்குப் புகழைத் தேடித் தந்தது .
இவர்கள் இருவரும் பல இடங்களில் சேர்ந்து சுற்றியதை வைத்து காதல் முளைத்துவிட்டதாக எழுதினார்கள். டேட்டிங்கில் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்
“அப்படியெல்லாம் எதுவுமில்லை நான் இன்னமும் சிங்கிள்தான்” என கோபமுடன் பதிவிட்டிருக்கிறார் நிதி அகர்வால்.
இனி காஜல் அகர்வாலைப் பற்றிய செய்தி…
சிரஞ்சீவியின் பிரமாண்ட தயாரிப்பான ஆச்சார்யாவில் இருந்து காஜல் அகர்வாலும் விலகி விட்டார் என்பதாக தெலுங்கு தேச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
அதை தற்போது காஜல் அகர்வாலின் பி.ஆர்.ஓ மறுத்து இருக்கிறார். “அப்படியெல்லாம் விலகவில்லை.ஆச்சார்யாவில் நடிக்கிறார் “என்பதாக.!