ஆறு, வேல்,சிங்கம்1 ,2,3 ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் சூர்யா- இயக்குனர் ஹரி கூட்டணி ‘அருவா’ படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே,ராஷ்மிகா மந்தனா உள்பட சில கதாநாயகிகள் பெயர்கள் அடிபட்டது. இந்நிலையில், நடிகை ராசிக்கன்னா அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
மேலும்,சுந்தர்சியின் அரண்மனை-3 படத்திலும், இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க உள்ளதாகவும் லாக்டவுன் முடிந்த பிறகு இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். ராசிக்கன்னா தமிழில் ஏற்கனவே இமைக்கா நொடிகள் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Aranmanai 3 and a film with Suriya sir under Hari sir’s direction in Tamil.. Will give more clarity about two projects in Telugu that are under discussions, once the lockdown is over ☺️ https://t.co/sSIESmG3FJ
— Raashi (@RaashiKhanna) May 3, 2020