கொரானா என்கிற கொள்ளை நோய் பச்சை ஏரியாவில் இல்லையாம். அதனால் அங்கு மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு உத்திரவிட்டிருக்கிறது.தமிழ்நாட்டில் பச்சையே இல்லியா?
கர்நாடகத்தில் சில பகுதிகளில் கடைகளை திறந்திருக்கிறார்கள். குடிமக்களுக்கு கொண்டாட்டம். தங்களுடைய பிறந்த நாளுக்காகக்கூட இப்படி ஆடிப்பாடி மகிழ்ந்திருக்க மாட்டார்கள். குடித்தால் லிவர் காலி.பிறகு கிட்னியும் காலி என்பது தெரிந்திருந்தும் ஆடிப்பாடி வரவேற்கிறார்களென்றால் மதுவின் பெருமையை என்னவென சொல்வது?அது சரி பக்கத்து மாநிலங்களில் கடையை திறந்துவிட்டார்கள் .நம்ம ஊரில் பச்சை நிற டாஸ்மாக் எப்ப திறக்கும்?நம்ம ஆளு வறுமையை மறப்பதற்கு மதுதானே அரு மருந்து.!
https://twitter.com/i/status/1257182311629697024