உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் உயிர்ப்பயம் .
வட்டமிடும் பருந்து சட்டென மின்னெலெடுத்துப் பாய்ந்து கோழிக்குஞ்சினை பற்றிக்கொண்டு போவதைப்போல தங்களது உயிரையும் கொரானா கொண்டு போய் விடுமோ என்கிற அச்சம்..
ஆனால் உயிர்ப்பயம் எதுவுமின்றி எல்லையைக் காக்கிறார்கள் நமது ராணுவ வீரர்கள்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு ஹந்தவரா பகுதி. 12 மணி நேரத் தாக்குதல்.பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு இந்தியராணுவ கர்னல் ஒருவர் ,மேஜர் ஒருவர் ,இரண்டு ராணுவ வீரர்கள் ,ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய இந்திய வீரர்கள் பலியாகிவிட்டார்கள்.நமக்கு இழப்பு அதிகம்.
பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.
இந்த சேதி நடிகர் மகேஷ்பாபுவை மிகவும் பாதித்திருக்கிறது. மனிதர் துடித்துப் போய் இருக்கிறார். “நமது தேசத்தின் டார்க் சைடு என்கிறார். வீரர்களின் மனோதிடத்துக்கும் தேசம் காக்கும் உயர்ந்த பணிக்கும் தலை வணங்குகிறேன்.ஒரு நிமிடம் எழுந்து நின்று வணங்குகிறேன்” என்பதாக அறிவித்திருக்கிறார்.
நாமும் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.