ஓரின சேர்க்கைப் பிரியர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அதைப்பற்றிய புரிதலும் இருக்கிறது. மூன்றாம் பாலினத்தவர் திருமணம் செய்வதை ஏற்றுக்கொண்டும் இருக்கிறார்கள்.
பிரபல பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி ’சீசன்ஸ் கிரீட்டிங்ஸ்’ என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார்.முன்னாள் இந்திய அழகி.
ஓரினச்சேர்க்கை பற்றிய இந்தக்கதையை ராம்கமல் முகர்ஜி என்பவர் இயக்கியுள்ளார். மறைந்த இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் என்பவருக்கு அஞ்சலி செலுத்துகிற படம் இது.
இந்த படம் பற்றி ஜெலினா ஜெட்லீ என்ன சொல்கிறார்?
“உலகின் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாகி வரும் நிலையில் இந்தியாவில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை , இந்தியா மதக்கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளதால் இதனை அவர்களால் ஏற்க முடிவதில்லை.
ஓரினச்சேர்க்கையை குறித்த புரிதல் இல்லை” என்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
செலினா ஜெட்லியின் இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீசன்ஸ் கிரீட்டிங்ஸ் குறும்படம் விரைவில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகப் போகிறது.