மணிரத்னத்திடம் ஏழு ஆண்டு குருகுலவாசம். பெயர் சுதா கொங்கரா.
பின்னர் துரோகி இறுதிச்சுற்று ஆகிய படங்களை இயக்கி பிரபலம் ஆனார்.
அடுத்து பெரும் எதிர்பார்ப்பில் இருப்பது சூர்யா நடித்து வரவிருக்கிற ‘சூரரைப் போற்று ‘
கொரானா ஊரடங்கினால் ஒதுங்கி நிற்கிறது இந்தப்படம்.
சூர்யாவை இயக்கியவர் அடுத்து இயக்குவதாக இருந்தால் அது விஜய் அல்லது அஜித் ஆகியோரது படமாகத்தான் இருக்கும்?
இதுதான் பாமர ரசிகனின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
அத்தகைய எதிர்பார்ப்புகளை சில போலி கணக்குகள் தீர்த்து வைக்கும்.
சுதா கொங்கராவின் அடுத்தப்படம் விஜய் நடிக்கும் புதிய படம்.இதைப்பற்றிய அறிவிப்பு விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 அன்று வெளியாகும் என சுதா கொங்கராவே தன்னுடைய டுவிட்டர் ஐடியில்செய்தி அறிவித்திருப்பதாக பரபரப்பு பற்றி எரிந்தது.
‘நான் ட்விட்டர் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. நான் புதிய படத்தில் ஒப்பந்தமானால், அதுகுறித்து நானே அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பேன். அதனால் போலி டுவிட்டர் கணக்குகளை தவிர்த்துவிட்டு, அதன்மீது நேரத்தை வீணாக்காதீர்கள் “என்று சுதா கொங்கராவே அறிக்கை விட்டிருக்கிறார்.