பிரபல தெலுங்கு மற்றும் இந்திப் பட இயக்குனர் ராம் கோபால் வர்மா.அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வது வழக்கம். இந்நிலையில் தற்போது பெண்கள் மதுகுடிப்பது குறித்து இவர் தெரிவித்துள்ள கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரும் 17 ஆம் தேதி வரைலாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் சில நிபந்தனைகளுடன் டெல்லி, கர்நாடகா, ஆந்திர உட்பட சில மாநில அரசுகள் மதுபானக் கடைகளை நேற்று திறந்தனர். இதையடுத்து, பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் அளவிற்கு ஆயிரக்கணக்கில் கூட்டம் திரண்டது.
இதில் ஏராளமான பெண்களும் வரிசைகட்டி கிட்டி நின்றது தான் ஹைலைட். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானநிலையில், இது குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டரில், “பெண்கள் மது வாங்க வரிசையில் காத்திருக்கும் போட்டோவை பதிவிட்டு, அதில், மதுபானக் கடையில் யார் நிற்கிறார்கள் என்று பாருங்கள்? குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று இப்போதும் பேசி வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். ராமகோபாலன் இந்த பதிவைப்பார்த்த பிரபல பாலிவுட் பாடகி சோனா மொகபத்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்து,”நல்லா படிச்சவங்க இந்த மாதிரி டுவிட் போடமாடாங்க ,இதில் எங்கிருந்து வந்தது பாலின வேறுபாடு? ‘ஆண்களை போலவே, பெண்களுக்கும் மதுபானம் வாங்கவும் குடிக்கவும் உரிமை இருக்கிறது. ஆனால், குடித்துவிட்டு வன்முறையில் இறங்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.