மக்களின் உயிரை எவ்வளவு இழிவாகக் கருதுகிறார்கள் மேட்டுக்குடியினர் என்பதற்கு மாண்பமை அமைச்சர் செல்லூர் ராஜு ,பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ஆகியோரின் கூற்று நல்ல உதாரணமாகும்.
வறியவர்கள் ,வறுமையில் செத்துக் கொண்டிருப்பவர்களை விட சரக்கு அடிப்பவர்களைப் பற்றிய கவலை செல்லூர் ராஜுவுக்கு.! இவரை ஞாபகம் இல்லையா? வைகை அணையில் தெர்மாகோல் போட்டு தண்ணீர் ஆவியாகாமல் இருப்பதற்கு ஐடியா கொடுத்த விஞ்ஞானி.
இவர் சொல்கிறார்.
“குடிமகன்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகளைத் திறக்க முதல்வர் முடிவு செய்தார். எல்லாரும் மதுக்கடையை திறந்த பின் நாம் திறக்காமல் இருக்க முடியாது.” என்று மதுரையில் கூறியிருக்கிறார்.
அடுத்தவர் எஸ்.வி.சேகர். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.கெட்டுப்போன பால் பாக்கெட்டுகளுக்காக அரசிடமிருந்து வேறு பாக்கெட் வாங்கியவர்.
“போற உசிரு கொரோனா ல போனா என்ன சரக்கடிச்சு போனா என்ன choice is yours.”என்று இவர் சொல்லியிருக்கிறார்.
ஸ்லோ பாய்சனை லேபிள் போட்டு விற்கிறவர்கள் நாளை ரெட் லைட் ஏரியாவையும் கொண்டுவருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதுதான் சில மாநிலங்களில் இருக்கிறதே.!