அவ்வப்போது கருத்துகளை ,கண்டனங்களை பதிவு செய்கிறவர் கஸ்தூரி. இவருக்கு கணிசமான அளவில் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை அரசு மூடியே வைக்காது என்பது கஸ்தூரிக்கு நன்றாகவே தெரியும்.என்றாவது ஒரு நாள் திறப்பார்கள் என்பதும் தெரிந்திருக்கும்.தமிழக அரசு எப்படியெல்லாம் டபாய்க்கும் என்பதும் அவருக்கு தெரிந்துதான் இருக்கும்.அப்படியிருந்தும் சற்றே சறுக்கி விழுந்திருக்கிறார்.
“தமிழகத்தில் தனிக் கடைகள்,சமூக இடைவெளியை பயன்படுத்தி ஒரு சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கலாம்”என்றுஅரசு அறிவித்தபோது, அந்த குறிப்பில் டாஸ்மாக் கடைகள் குறித்து எந்த அறிவிப்பும் இருக்கவில்லை .
இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறபோது “ டாஸ்மாக்கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி”என்றும் . என்றும் மற்றொரு பதிவில்,“மது விற்பனை இல்லை என்ற முடிவெடுத்துள்ள புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி. பொறுப்பான முடிவு. தமிழகத்திலிருந்து பலரும் காரைக்காலுக்கும் பாண்டிச்சேரிக்கும் படையெடுத்து தொற்று பரப்பும் அபாயத்தை முளையிலேயே கிள்ளி விட்டார்’என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
டாஸ்மாக்கை திறப்பதில்லை என்று எந்த இடத்திலும் அரசு குறிப்பிடாத நிலையில் அதற்கு பாராட்டுத் தெரிவித்தவர் கஸ்தூரி.அவசரப்பட்டு விட்டார் அப்போது.!
இப்போது அலாரம் அடிக்கிறார்.அபாயச்சங்கு ஊதுகிறார் !செவித்திறன் அற்ற அரசு என்று அவரே மற்றொரு பதிவிடாமல் இருந்தால் சரி.!
“,தமிழக அரசை மன்றாடி கேட்டு கொள்கிறேன். கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தபோது மூடிவிட்டு இப்பொழுது அதிகமாகும் பொழுது திறக்காதீர்கள்.
இதனால் வரும் வருவாயை விட இழப்பு அதிகமாகிவிடும். கடையில் வாங்கும் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பிவைக்கவேண்டாம்.
இதற்கு கேவலமான சப்பைக்கட்டுக்கள் வேறு. இதை நான் எதிர்பார்த்ததுதான்,
நேற்று ஏமாந்துவிட்டேன். ஏமாந்து விட்டோம். அவசரபட்டுட்டேனே. என் கணக்கு பொய்ச்சிருச்சுன்னு சந்தோஷ பட்டுட்டேனே. குடிக்கு அடிமையான தமிழக அரசை பற்றி என் கணக்கு சரி. அரசு பண்றது தப்பு. நாடு முழுவதும் இன்று நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது விற்பனையை திறக்க துணிகிறீர்கள்?
குடி கொரோனா ரெண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள்.“என கடுமையாக விமர்சித்துள்ளார்.