மும்பையை விட்டு விலகி இருக்கும் இடம்தான் பன்வெல். இங்குதான் பாலிவுட் காதல் மன்னன் சல்மான்கானின் பண்ணை வீடு இருக்கிறது.
தனித்திரு விலகியிரு என்கிற ஊரடங்கு ஒழுக்கவிதிகளுக்கு ஏற்ப தன்னுடைய பண்ணை வீட்டுக்கு வந்து விட்டார் சல்மான். இவருடன் இயக்குநர் அபிராஜ் ,அவரது மனைவி , மற்றும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ,மற்றொரு நடிகை லூலியா வன்டுர் உள்பட மொத்தம் 22 பேர் அந்த பண்ணை வீட்டில் இருக்கிறார்கள்.
இயக்குநர் அபிராஜ் கதை டிஸ்கஷன் செய்வதாக சொல்கிறார்.
சல்மானுடன் அடிக்கடி கிசுகிசுக்களுக்கு ஆளாகியவர்தான் ஜாக்குலின். ஸ்ரீலங்கா நடிகை. பொது நிகழ்ச்சியில் சல்மானுக்கு முத்தம் கொடுத்து தன்னுடைய நெருக்கத்தை வெளிக்காட்டியவர்தான் இந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
சல்மானின் செல்லப்பிராணியாக வெள்ளைக்குதிரையுடன் இவர் விதம் விதமாக போஸ் கொடுத்து எடுத்த படங்களை ஊடகங்களிடம் வெளியிட்டு வருகிறார்.
புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்குலின் வெளியிட்டு, ‘இந்த லாக்டவுன், எனக்கு சுதந்தரமான அனுபவமாக இருக்கிறது. பலர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவேன்.நான் இந்த பண்ணை வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறேன். இங்கிருந்தபடி தேவைப்படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். அவர்களின் வலிமைக்கும் ஆரோக்கியத்துக்கும் பிரார்த்தனை செய்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.