மறக்க முடியுமா அந்த பின்னணிப்பாடகியின் பெயரில் வெளியான புகைப்படங்களை!
அவை அத்தனையும் போலிக்கணக்கில் வெளியானவை .எனது அசல் கணக்கில் வரவு வைக்கப்படாத அருவெறுப்பான படங்கள் என்கிறார் பின்னணிப் பாடகி சுசித்ரா .
அண்மையில் பிரபல ஆங்கில நாளேட்டுக்கு அளித்திருந்த பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். ” நான் வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் மன்னிப்புக் கேட்கிறேன்,”என மனம் உடைந்து பேசியிருக்கிறார்.
மன உளைச்சல் காரணமாக வெளிநாட்டில் கிதார் வாசிப்பு இசைப்பயிற்சி என முழு மூச்சுடன் செயல்பட்டதாக சொல்லியிருக்கிறார்.
வேறு ஒரு ஊடகம் ஒன்றில் வீடியோ கால் மூலம் சுசித்ரா தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
‘சுச்சி லீக்ஸ் பிரச்சனையின் அழுத்தம் தாங்க முடியாமல், நான் ஒரு வருடம் லண்டனில் குக்கிங் படித்தேன். அதன் காரணமாகவே இப்போது சமையல் வீடியோக்களை பகிர்ந்து வருகிறேன். மேலும் மீண்டும் எஃப்.எம்மில் ஆர்.ஜேவாக நிகழ்ச்சிகள் செய்யும் திட்டம் உள்ளது.”என குறிப்பிட்ட அவர் தனது முதல் க்ரஷ் பற்றிய கேள்விக்கு, பதிலளிக்கையில்,”எனக்கு ரொம்ப வருஷமாவே நடிகர் விஜய்தான். அவர் தான் என் முதல் க்ரஷ் என்கிறார். இவரது காதல் கணவர் பெயர் கார்த்திக் .