மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனின் தாக்குதலுக்கு மத்திய ,மாநில அரசுகள் இன்றும் உள்ளாகியது. அவரது கவிதை பாணியிலேயே வறுத்து எடுத்திருக்கிறார்.
“ஊரடங்கை சாதகமாக்கி காவேரி மேலாண்மை தன்னாட்சியுரிமை பறிப்பு ,மற்றும் மின்சார சட்ட த் திருத்த வரைவை மாற்றிய மத்திய அரசு, மாணவர்களுக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை தன்னிச்சையாக அமல்படுத்துவது, தலைக்கனம் தவிர வேறென்ன?. இத்தகைய கனம் பொருந்தியவர்கள் மக்கள் தீர்ப்பால் தவிடு பொடியானதே வரலாறு.”என மத்திய அரசை கண்டித்தவர் அப்படியே மாநில அரசுக்கும் சிறப்பு அர்ச்சனை.!
“கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.?” என்று கேட்டிருக்கிறார்.
7 ஆம் தேதியில் இருந்து டாஸ்மாக் சரக்குக்கடைகள் திறக்கப்பட்டிருக்கும்.ஆனால் சரக்கு வாங்க வருகிறவர்கள் குடை பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குடிமகன்கள் கோட்டை வெயில் வாடி வதங்கிவிடக்கூடாது அல்லவா!