கொரானாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்க உலகில் உள்ள விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் முழு வீச்சுடன் இயங்கி வருகிறார்கள்.
உலகமே வறுமையின் பிடியில்.!
இந்த நிலையிலும் சிலருக்கு கிளுகிளுப்பு தேவைப்படுது..அதனால் சரக்குக்கடையை அரசு திறக்கப்போகிறது. போதையிலாவது பசியை மறக்கலாம் அல்லவா!
ஆனால் விஜயசேதுபதியின் எண்ணமே ,நினைப்பே வேறு விதமாக இருக்கிறது.
“பசி என்றொரு நோய் இருக்கு.!அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டு பிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும். ஓ மை கடவுளே!” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
நடிகர் இல்லை .மனிதன்.!