“பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்… ஓ மை கடவுளே! “என விஜய்சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
அத்தனை நோய்க்கும் மருந்து கண்டு பிடித்தாலும் பசிக்கு மட்டும் மருந்து கண்டுபிடிக்க முடியாது என்பது விஜய் சேதுபதிக்கு தெரியாமல் இருக்குமா என்ன ?
இந்தப்பதிவு ஆற்றாமையின் வெளிப்பாடு.!
ஓ மை கடவுளே என்று கூறியிருக்கிற பாணியே அதைத் தெரிந்து கொள்ளப்போதுமானது.
இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வெளியாகின.
திரௌபதி பட இயக்குநரான மோகன் ஜியும் , தனது டுவிட்டரில்,அவரது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
“பசி எடுக்கலனா இந்த உலகம் எப்படி இயங்கும்.?. பசி தான் உங்களை உழைக்க சொல்லும், பசி தான் அடுத்தவர் மீது கருணையை உருவாக்கும், பசியை அழிக்கும் நாள் முதல் உலகம் அழிய தொடங்கும் நண்பா.. “என பதிவிட்டுள்ளார்.