லட்சுமிராய் என அழைக்கப்பட்டவர் ராய் லட்சுமியாக மாறினாலும் அவரது ரசிகர்கள் பழைய பெயரை மறப்பதாக இல்லை. அவரது பிறந்த நாளை ‘#ஹேப்பி பர்த்டே லட்சுமிராய்’ என்கிற ஹாஷ்டேக்கில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கை நிறைய படங்கள் இல்லையென்றாலும் கவலை கொள்ளுகிற அளவுக்கு படமே இல்லாமல் இல்லை
இவரது நடிப்பில் உருவாகிவருகிற ‘சிண்ட்ரெல்லா’ படத்தில் இருந்து பிறந்த நாள் பரிசாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் வினு வெங்கடேஷ் இயக்கம் , ராய் லட்சுமி, பிக்பாஸ் சாக்ஷி அகர்வால் என பலர் நடித்துள்ளனர்.ஹாரர் ஃபேண்டஸி படமான இந்த படத்தில் பெரும் பாலும் அதீத கவர்ச்சியில் பிகினி உடையில் பார்த்து பழகிப்போன ராய் லட்சுமியைபார்க்க முடியாது.
கிராமத்து சிறுமியாக பாவாடை சட்டையுடன் ‘துளசி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் .
சிண்ட்ரெல்லா கதை என்றாலே, ஏழை பெண்ணுக்கு பணக்கார வாழ்வு கிடைப்பதும், அதை பார்த்து பொறாமை படும் உறவினர்கள், அவளை பழிவாங்க நினைப்பதும் தான் கதை.அதே பாணியில்,இப்படமும் பேய் படமாகவும், ஃபேண்டஸி படமாகவும் உருவாகி உள்ளது என்கிறார்கள்.ராய்லட்சுமி தற்போது, ‘மிருகா’ படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.