இயக்குநர் இமயம் பாரதிராஜா தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியே “ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்” என்கிற தொனியைத்தான் எதிரொலிக்கிறது.
கொரானா பாதிப்பு சென்னையில் அதிகம் தான்.அதிலும் கோயம்பேடுக்கு போய் வந்தவர்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவல் பேரதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது .
சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்கிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கண்டிப்பாக செய்யப்பட வேண்டும் என்றும், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தீவிரமாக நடைமுறை படுத்தி வருகிறது.
சென்னை உப்புக்காற்றில் இருந்து என்ன பிரயோசனம். வேலை வெட்டி இல்லாமல் வெறும் அறிக்கைகளை விடுவதை விட மேற்குத் தொடர்ச்சி மழைக் காற்றை சுகமாக அனுபவிக்கலாமே என்று பாரதிராஜா சொந்த ஊரான தேனிக்கு சென்று விட்டார்..,
சுகாதாரத்துறையினர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தியதாகவும், அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்ற போதிலும் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு பாரதிராஜாவின் தேனி வீட்டில் ’தனிமைப்படுத்துதல்’ ஸ்டிக்கரையும் ஒட்டிவிட்டார்கள் .