மாஸ்க்குடன் கையில் நடிகை பாட்டிலுடன் வந்தால் உடனே அது சரக்குத்தான் என்று சொல்லிவிடலாமா? அரசு சரக்குக்கடைகளை திறந்து விட்டதுமே காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்கிற கதையாகிவிட்டது.
நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு ரகுல் ப்ரீத்சிங் சரக்கு வாங்கிக் கொண்டு போவதைப் பாருங்கள் என வைரல் ஆக்கி விட்டார்கள்.
ரகுல் பிரீத் போன்றவர்கள் அவர்களே கடைக்குப்போய் வாங்க வேண்டிய அவசியமே இல்லை. திரை உலகத்தினருக்கு இத்தகைய பொருட்களை வாங்கித் தருவதெற்கென்றே சிலர் இருக்கிறார்கள். வெளிநாட்டுச்சரக்கு வாங்கும் வசதி படைத்தவர்கள் அவர்கள்.
ரகுல் பிரீத் வாங்கியது என்ன என்பதை பாருங்கள். மருந்துக்கடையில் அவர் அவர்க்கு வேண்டிய சிரப் வகையறாக்களை வாங்கிச்சென்றதை தவறாக சித்தரித்து வைரல் ஆக்கிவிட்டனர்.அவர் மாஸ்க் அணிந்து கொண்டு மருந்துகளை வாங்கிச்செல்கிற வீடியோவை நீங்களும் பாருங்கள்.