
பிரியங்கா சோப்ராவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு மீரா சோப்ராவைத் தெரியுமா?
நெருங்கிய உறவுக்காரப்பொண்ணு. இவரும் நடிகை தான்.! செக்சன் 375 என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.தமிழில் ‘அன்பேஆருயிரே ,ஜாம்பவான்,லீ,இசை,கில்லாடி’ உள்ளிட்ட பல படங்களில் நிலா என்ற பெயரில் நடித்துள்ளார்.
இவரது அப்பா மாலை நேர நடைப்பயிற்சி சென்ற போது ஸ்கூட்டரில் வந்த இருவர் அவரிடம் கத்தியைக்கட்டி செல்போனை பறித்து சென்று விட்டார்களாம்.
பொங்கி விட்டார் மீரா சோப்ரா. டெல்லியில் எப்படி பாதுகாப்புடன் இருக்கிறோம் பாருங்கள் என்று சமூக வலைத்தளத்தில் எழுத போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்கிறது. எப்.ஐ.ஆர் போட்டதும் மீராவின் குரலே மாறி விட்டது .போலீசை புகழ்ந்து தள்ளி விட்டார். குற்றம் நடக்கிற இடங்களில் எல்லாம் போலீஸ் இருக்க முடியாது. அவர்களிடம் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள். இது தெரியாமல் பொங்குவதும் பின்னர் புகழ்வதும் இவர்களைப் போன்றோருக்கு அழகல்ல.
எட்டு பால் பாக்கெட் கெட்டுவிட்டது என்று டிவிட்டரில் போட்டதுமே ஒரு நடிகரின் வீட்டுக்கு புதிய பால்பாக்கெட்டுகளை தமிழக அரசு விநியோகம் செய்த கதை மீராவுக்கு தெரியாது போலும்!