கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வரும் மே மாதம் 17 ந்தேதி வரைநீடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் நேற்று முதல் 7-ந்தேதி (நேற்று) முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு, அறிவித்தது.
நேற்று ஒரு நாள் டாஸ்மாக் மூலம் மது விற்பனை ரூ. 176 கோடி யை தொட்டது.இந்நிலையில், டாஸ்மாக் திறக்கப்பட்டதை எதிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட சில அரசியல் கட்சியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், டாஸ்மாக் விற்பனையில் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் (சமூக இடைவெளி) மீறப்பட்டதால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு முடியும் வரை மூட வேண்டும் என்றும், ஆன்லைனில் மது விற்பனை செய்யலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ,”நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என பதிவிட்டுள்ளார்.