பத்மவிபூஷன் விருது பெற்ற ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சமூகத்தில் வெவ்வேறு தொழில் செய்து வருபவர்களுக்கு பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி ஊடகங்களில் அவர்களைப் பற்றிஒரு செய்தி வெளிவந்தாலே போதும் அது மிகப்பெரிய விருது -அங்கீகாரம்.
அதற்காக சிறு வயதில் பஸ் கண்ரக்டராக இருந்தபோது ஏங்கியவர்தான் சிவாஜி ராவ் என்கிற ரஜினிகாந்த்!
பல வருட உழைப்பிற்கும், கடினமnன முயற்சிக்கு பிறகு தினம்,தினம் செய்திகளாக மாறி நிற்கும் அளவிற்கு வளர்ந்து விட்ட திரு. ரஜினி காந்த் அவர்களுக்கு மக்கள் தந்த வெற்றியும் -விருதுகளுமே அங்கீகாரமாகும்!
இது வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு மட்டுல்ல …. வளர்ந்து நிற்க்கும் கலைஞர்களுக்கும் பொருந்தும் !
அத்தோடு -திரை உலக பாராட்டுகளையும் விருதுகளையும் தாண்டி – சமூகஅங்கீகாரம்கிடைக்கும் போது தான் அந்த கலைஞன் உச்சம் பெறுகிறார்!
அந்த வகையில்-
உலக தமிழர்களும்,இந்தியர்களும் “சூப்பர் ஸ்டார்”என கொண்டாடும் கலைஞராக உள்ள திரு. ரஜினிகாந்த் அவர்கள் -இந்திய அரசின் உயரிய “பத்ம விபூசன்”விருதை பெறுவதில் தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமிதம் கொள்கிறது!
காலம் தன்னிடம் உள்ள அருட்கொடைகள் அனைத்தையும் கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்கட்டும்!
வாழ்த்துக்களுடன்…….தென்னிந்திய நடிகர்சங்கம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.