,து
பரபரப்பு ஸ்டார்ட் ஆனது .! எதோ ஒரு விஷயம் அதில் மறைந்திருக்கிறது என பேச ஆரம்பித்தார்கள். துப்பாக்கி படத்தின் 2 ம் பாகம் உருவாகவிருப்பதைத் தான் அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பதாக சொன்னார்கள். ,
மீண்டும் சந்தோஷ் சிவன் -விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைய இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து ஏ,ஆர்.முருகதாஸ் வட்டாரத்திடம் கேட்ட போது , இது அதே பாணியிலான வேற ஒரு கதை என்றனர்
. தற்போது இதை உறுதி படுத்தியுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
தற்காலிகமாக ‘தளபதி 65’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் கூறுகையில்,”இப்படம் துப்பாக்கி படத்தின் 2 ம் பாகம் அல்ல,முற்றிலும் மாறுபட்ட புதிய ஸ்கிரிப்ட்” என்கிறார். இப்படத்தின் திரைக்கதையை முற்றிலும் முடித்து விட்ட ஏ.ஆர்.முருகதாஸ் அதை மேலும் மெருகேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
தமன் இசையமைக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது.