ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரிக்கும் படம் ‘சேது பூமி’ தமன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக சமஸ்கிருதி நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம்புலி, ராஜலிங்கம், ஜுனியர் பாலைய்யா, சேரன்ராஜ், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், தவசி மற்றும் பலர் நடிக்க, தாய்மாமன் வேடத்தில் இயக்குநர் கேந்திரன் முனியசாமி நடித்துள்ளார்.
‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இப்படத்தை இயக்குகிறார். எஸ்.முத்துராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். பாரதி, மோனீஸ் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். பிறப்பும் இறப்பும் இறைவன் கையில். அதை நாம் கையில் எடுத்தால் என்ன நடக்கும் என்பதே கதை. பொதுவாக ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதி மக்களிடம் வறுமையும் கோபமும்தான் இருக்கும். அந்த கோபத்திற்கான நியாயம், அவர்களுடைய வாழ்க்கை முறை ஆகியவற்றை இப்படத்தின் மூலம் விவரிக்கிறோம்.
மனிதன் தனது உறவுகளையும் உணர்வுகளையும் கொஞ்சம் வேகமாகவே மறந்து வருவது இந்த சமூகத்திற்கு மிகப் பெரும் கேடு என்று கூறும் படமே ‘சேது பூமி’ என்கிறார் இயக்குநர்.