சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’24’ படத்தின் புதிய போஸ்டர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. வயதான தோற்றத்தில் கொடூர பார்வையுடன் எலக்ட்ரிக் சேரில் உட்கார்ந்து சூர்யா சிரிக்கும் சிரிப்பு எல்லோரையும் மிரட்டியது.இந்நிலையில்,சூர்யாவால் தனது தூக்கத்தை அடிக்கடி தொலைத்து வருவதாக நடிகர் கார்த்தி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தன டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது. “சூர்யா ஒவ்வொரு முறையும் தனது அர்ப்பணிப்புத் தன்மையால் தனது உருவத்தையே மாற்றி விடுகிறார். இதன் மூலம் அவர் தொடர்ந்து தூங்காத இரவுகளை எனக்கு அளித்து வருகிறார். இந்தப் போஸ்டர்களை பாருங்கள்” என்று சமீபத்தில் வெளியான 24 படத்தின் போஸ்டர்களை குறிப்பிட்டிருக்கிறார்.