இதுநாள் வரை டாஸ்மாக் பற்றி எந்த விதமான கருத்துகளையும் ரஜினி மக்கள் மன்ற நிறுவனர் ரஜினிகாந்த் எதுவுமே சொல்லவில்லை.
மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் உயர்நீதி மன்றம் சென்றது பற்றியும் எதுவும் சொல்லவில்லை. தற்போது மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதி மன்றம் சென்றிருக்கிறது. தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்றால் எங்களின் கருத்தையும் கேட்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் கணக்கில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
“இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்”என்பதாக பதிவு செய்திருக்கிறார்.