ஷ்ரத்தாதாஸ் என்கிற கவர்ச்சிப் புயல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் ஆகிய நாடுகளைக் கடந்திருந்தாலும் தமிழ்நாட்டை மட்டும் கடக்கவில்லை. அதனால் கவர்ச்சி ரசிகர்கள் ஓரளவுக்கு ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.
அண்மையில் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஷ்ரத்தா தாஸ் கூறி இருப்பதாவது
“நான் கவர்ச்சியாக நடிப்பதில் எங்கள் வீட்டில் எத்தகைய பிரச்னையும் கிடையாது. ஜெனிபர் லோபசுக்கு என்னுடைய அப்பா பரம ரசிகர்.பாலிவுட்டில் கதாநாயகிகள் பெரும்பாலும் கவர்ச்சியாகவே இருக்கிறார்கள் .
எந்த வேடமாக இருந்தாலும் அதில் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். தமிழில் எனக்கு வாய்ப்புகள் வந்தது.ஆனால் என்னவோ தெரியவில்லை .வந்த வாய்ப்புகள் நழுவிப் போய் விட்டன.மிஸ்கின் ,விஷால் ஆகிய இருவரின் படத்திலும் நடிப்பதாக இருந்தது. மிஸ்கின் படத்தில் வெடிகுண்டு பெண்ணாக நடிக்கவேண்டியது. கிடைக்கவில்லை”என்று வருத்தப்பட்டிருக்கிறார் ஷ்ரத்தாதாஸ்