“நீங்க தப்பு செஞ்சா அப்பா கமல் என்ன செய்வார்?”
ஒரு ரசிகரின் நீண்ட நாள் சந்தேகம் போலும்.!அன்று கேட்டே விட்டார் ஸ்ருதிஹாசனிடம்.!
“இதுவரை அப்பா தண்டனை கொடுத்ததில்லை. அதட்டுனது கூட இல்லை.!அவர் லாஜிக் பார்ப்பார்.என்ன காரணம்னு தெரிஞ்சுக்குவார் .அவர் சுபாவம் அப்படி!”
“ஊரடங்கு முடிஞ்சதும் நீங்க பார்க்கிற முதல் வேலை?”
“நின்னுபோன போயிருக்கிற வேலையைத்தான் செய்யணும். பாதுகாப்பான முறையில் வேலையை பார்க்கணும்.”