இன்று அன்னையர் தினம்.
ஒரு சிலர் இந்த நாளிலாவது அம்மாவை நினைக்கட்டுமே…என்று அன்னையர் தினத்தை உருவாக்கினார்களோ என்னவோ!
முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் அம்மா அப்பாவை இன்றாவது பார்த்து விட்டு வரலாம் அல்லவா! மனைவி சொல்லே மந்திரம் என்று வாழ்கிற ‘மகான்’களுக்கு மட்டுமல்ல ,கணவனே கதி என புகுந்த வீட்டுக்கு வந்து விட்ட மகள்களும் அம்மாவை நினைத்து மகிழும் நாளின்று.
நடிகைகளில் பலர் அம்மாவைப் பற்றி புகழ்ந்து தள்ளியிருந்தாலும் தலைவி நடிகை கங்கனா ரனாவத் எழுதிய கவிதை மட்டுமே உயர்வாக இருக்கிறது.
“உன்னுடைய கருவறையில் மட்டுமே அன்பும் அரவணைப்பும் கிடைத்தது!”