ஊர் பேசினால் என்ன பேசட்டும் என தைரியமுடன் பாய் பிரண்ட் முஸ்தபாவை காதலித்து கரம் பற்றினார்.
மதம் கடந்து கல்யாணம் பண்ணிக்கொண்டால் யாரும் ஆன்ட்டி இந்தியன் ஆவதில்லை.
தனது ரசிகர்களுடன் இணையதளத்தில் உரையாடினார் பிரியாமணி .
“என்ன மேக் அப் இல்லாமல் இருக்கீங்க?” என்று ஒருவர் கேட்டதற்கு “வீட்டில்தான் இருக்கேன்.அதுக்கு எதுக்கு மேக் அப் .? தேவையில்லை ” என பதில் சொன்னார்.
“எங்கே உங்கள் கணவர் ? அவரை காட்டுங்கள்!” என இன்னொருவர் கேட்க “முஸ்தபா ரமலான் நோன்பு இருக்கிறார்.மிகவும் களைப்பாகி விட்டார் .ஓய்வில் இருக்கிறார்” என்கிற பதில் வந்தது.
“நீங்கள் நோன்பு இருக்கவில்லையா ?”
“இல்லை .அவர் மட்டும்தான் இருக்கிறார்!”
“உங்களின் படங்கள்?”
“பாலிவுட்டில் அஜய் தேவ்கன் படம் தெலுங்கில் வெங்கடேஷ் ,ராணா டகுபதி ஆகியோருடன் இரண்டு படம் பண்ணுகிறேன்” என்றார் பிரியாமணி.