கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு,திரிஷா கார்த்திக்,ஜெஸ்ஸியாக நடித்த விண்ணைத்தாண்டி வருவாயாதமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக நடிகை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் கவுதம் மேனனுடன் வீடியோ கால் மூலமாக, திரிஷா,செல்போனில் ‘4கே’ தரத்தில் கேமராவை எப்படி கையாளுவது எனக்கேட்க,அவருக்கு கவுதம்மேனன் ஒரு குறும்படம் எடுக்கும் அளவுக்கு பாடம் நடத்தியிருந்தார்.அந்த வகையில் இருவரது பங்களிப்பில் உருவான “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற குறும்பட டீசரை, தற்போது திரிஷாவும்,இயக்குனர் கவுதம்மேனனும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளனர் .விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் அடுத்த பாகத்தின் டீசர் போல் இது அமைந்துள்ளது. இது குறும்படத்தோடு நின்று விடுமா அல்லது மீண்டும் சிம்பு, திரிஷா பங்களிப்பில் விண்ணைத்தாண்டி 2 ம் பாகமாக உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கார்த்திக் டயல் செய்த எண்https://t.co/LtleOhGBVx
— Trish (@trishtrashers) May 10, 2020