அன்னையர் தினத்தில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது தாய்க்கு டுவிட்டரில் வாழ்த்து செய்தி பதிவிட்டிருந்தார்.
அடுத்தாக நடிகை நயன்தாராவின் குழந்தை பருவ புகைப்படத்தை பதிவிட்டு அவரின் அம்மாவிடம் “அழகான குழந்தையை சிறப்பாக வளர்த்து இருக்கிறீர்கள். நன்றி அம்மா. அவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டார்.
மேலும் இன்னொரு பதிவில், “எனது வருங்கால குழந்தைகளின் தாயின் கைகளில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் ..என நயன்தாரா வெள்ளைக்கார குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.இந்தப் பதிவு தற்போது செம வைரலாக பரவி வருகிறது ஆக விரைவிலேயே கல்யாண செய்தியும் வந்து சேரும் என்கிற முன்னறிவிப்புதான் இது. மண மேடை வெகு அருகில் இருக்கிறது..வாழ்த்துகள்.