பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி பிளாட்பார்மில் வெளியாகும் என்று அறிவித்ததுமே தியேட்டர் அதிபர்கள் பொங்கி எழுந்து விட்டார்கள். இனிமேல் சூர்யாவின் படங்களுக்கு தியேட்டர் கிடையாது என அறிவித்தாலும் பல படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றன.
உடனடி காசு.கை நிறைய பணம் என்பதால் எல்லோரின் பார்வையும் அங்குதான் இருக்கிறது.
தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பான ‘பெங்குயின்’ படம் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருக்கிற இந்த படத்தை ஈஸ்வர் இயக்கி இருக்கிறார். இசை சந்தோஷ் நாராயணன் .மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம்தான் பெங்குயின் .