இயக்குநர் விக்ரமனின் ‘புது வசந்தம்’ படம்தான் நடிகை சித்தாராவை உயரத்துக்கு செல்ல வழி அமைத்துத் தந்தது.தமிழில் ஒரு ரவுண்டு வந்தவர் அப்படியே தெலுங்கு ,மலையாளம் என பல மொழிகளில் பிரபலம் ஆனார்.
அவருக்கு தற்போது 47 வயது ஆகிறது.
இன்னமும் கலியாணம் பண்ணிக்கொள்ளவில்லை.
எதனால் தனித்த வாழ்க்கை? காதலில் ஏமாற்றமா?
“அதெல்லாம் எதுவும் இல்லை. நான் சிறு வயதிலேயே திருமணம் வேண்டாம் என்கிற மனநிலையில்தான் இருந்தேன். அது நாளடைவில் மாறவே இல்லை. என்னுடைய தந்தை பரமேஸ்வரன் நாயர் மரணம் அடைந்ததும் என்ன வாழ்க்கை என்கிற வெறுப்பே அதிகமாகியது. நான் இன்னமும் தனித்தே வாழ்கிறேன்” என்கிறார் நடிகை சித்தாரா.
வித்தியாசமான நடிகை.