ஞாயிற்றுக்கிழமை காலையில்தான் கல்யாண அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டார் பிரபல தெலுங்குப்பட தயாரிப்பாளர் தில் ராஜு.
“இன்று இரவில் நிஜாமாபாத்தில் இருக்கிற எங்களது பாலாஜி திருக்கோவிலில் எனக்கு திருமணம் நடக்கிறது”என்பதாக மட்டுமே அந்த செய்தியில் இருந்தது. மணமகள் யார் என்பது பற்றி மூச்சு விடவில்லை. உறவுக்கார பெண்ணா ,அல்லது அவர் விரும்பிய பெண்ணா என்பது பற்றி எதுவுமே தெரியாத நிலையில் அறிவிப்பு மட்டுமே வந்தது.
தில் ராஜுக்கு இது இரண்டாவது திருமணம்.
கடந்த 2017-ம் ஆண்டு தில் ராஜு பட வேலைகள் காரணமாக வெளிநாட்டில் இருந்த போது அவரது மனைவி அனிதா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.இவர்களுக்கு ஹன்சிதா என்கிற மகள் இருக்கிறார்.
தன்னுடைய தந்தையின் கல்யாணத்துக்கு இன்ஸ்ட்ராகிராமில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். தன்னுடைய
இரண்டாவது திருமணத்துக்கு தில் ராஜு என்ன சொல்கிறார் தெரியுமா?
“தற்போதைய நிலைமைகள் யாராலும் ஜீரணிக்க இயலாது .. தொழிலுக்கு பல தடைகள் உள்ளன. இதிலிருந்து மீள எனக்கு நேரம் இல்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் பிரச்சினைகள் உள்ளன .. தனிப்பட்ட பிரச்சினைகள் வெகு தொலைவில் இருப்பதாக என் வாழ்க்கையில் கூட உணர்கிறேன். நான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க உள்ளேன் .. இது ஒரு நல்ல நேரம் என்று நான் நினைக்கிறேன், ”
இவரது இரண்டாவது மனைவியின் பெயர் தேஜஸ்வினி. பிராமணப்பெண்.இந்தப்பெண்ணின் பெயரை வியாக ரெட்டி என்பதாக பெயர் மாற்றம் செய்திருக்கிறார்.