“ஏம்மா முகத்துக்குப் போட வேண்டிய ‘மாஸ்க்’கை எங்கம்மா காணோம்?”
நடிகை பூனம் பாண்டே கார் கண்ணாடியை இறக்கியபடியே அந்த போலீஸ் அதிகாரியை உற்றுப் பார்த்தார். நடிகையின் பக்கத்தில் உதவியாளர் சாம் அகமத் பாய்.
விலை உயர்ந்த கார். ஊரடங்கு விதிகளை மீறி மும்பை மரைன் டிரைவ் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்ததை நிறுத்தி விசாரித்தபோதுதான் காரில் இருந்தவர் பிரபல மாடல் ,பாலிவுட் நடிகை என்பது தெரிந்தது.
அதிகாரியை உற்றுப்பார்த்த பூனம் பாண்டே “ஜனங்களுக்கு கொரானா நோயைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்படி வந்திருக்கிறேன்” என்கிறார்.
“முகத்துக்கு மாஸ்க் போடலியே?”
“என்னை பார்க்கிறவன் முகத்தையா பார்க்கிறான்.அதனால் அவனுடைய பார்வை எங்கே போகுமோ அங்கே இருக்கு மாஸ்க்?”
அந்த அதிகாரி திக்கு முக்காடிப் போனார். உள்ளாடையும் மாஸ்க்கும் ஒன்னாகி விடுமா?
போடு கேஸை,!
“கவனக்குறைவு ,நோயைப் பரப்புகின்ற வாய்ப்பை உருவாக்குவது ,மற்றும் தேசியப்பேரிடர் சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அனுப்பி வைத்திருக்கிறார்.
பாவம் போலீஸ் அதிகாரி! மந்திரித்திருக்க வேண்டும்.