தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் விஜய் முக்கியமானவர்.
இவரது படங்களில் சமூகம் சார்ந்த அரசியல் வசனங்கள் இடம் பெறுவது வழக்கம். இதனால் ஆளுங்கட்சியினரின் எதிர்ப்பு என்பது தானாகவே வந்து விடும். இதனால் வருமானவரி சோதனை போன்ற பல மிரட்டல்கள்!
எந்த ஆட்சியிலும் நிகழ்வதுதான்.
பாஜக அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களின் தாக்குதலுக்கு அதிகமாக ஆளானவர்களில் விஜய்யும் ஒருவர்.
ஊரடங்கு,டாஸ்மாக் ஆகிய பிரச்னைகள் முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருகிற நிலையில் தற்போது விஜய் இழுக்கப்பட்டிருக்கிறார்.
பாஜகவை சேர்ந்தவர் குருமூர்த்தி. துக்ளக் பத்திரிகை ஆசிரியர்.
இவரது பத்திரிகையில் ஒரு கேள்வி பதில்.
கே: நடிகர் விஜய் மிகவும் தாமதமாக கொரானாவுக்கு நிதி உதவி செய்திருப்பது குறித்து?
ப: வருமானவரித்துறை வாரிச்சுருட்டிக் கொண்டு போன பிறகு அங்கும் இங்கும் சிதறி இருந்த பணத்தைச்சேர்த்து எடுத்துக் கொடுப்பதற்கு நேரம் தேவையில்லையா?
இந்த கேள்வி பதில் விஜய்யின் ரசிகர்களின் கோபத்தை தூண்டி விட்டிருக்கிறது.
திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
“நீ பற்ற வைத்த நெருப்பொன்று, பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினை எல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும் …” தளபதி விஜய் in #Mersal film dialogue. Just remembered this when I am seeing some happenings around. Everyone should keep this in mind” என்று பிரபல தயாரிப்பாளர் பாப்டா தனஞ்செயன் வசனத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மிகவும் சூடாகி விட்டார்.
தன் இக்கட்டையும் கடந்து #Thalapathy @actorvijay
நேயமுடன் உதவியதை நக்கலடித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நிலை பிறழ்ந்த செயல் இது!”என கண்டித்திருக்கிறார்,