தமிழில் வெற்றிமாறனின் ’ஆடுகளம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகைடாப்ஸி . பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி , வெளிநாட்டு பிரபலம் ஒருவரை காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தனது காதல் குறித்து டாப்ஸி வெளிப்படையாக அறிவித்துள்ளார். தனது காதலர் குறித்து டாப்ஸி கூறுகையில்,”டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தனது காதலர் ஒரு பேட்மிண்டன் வீரர் என்று என்றும் தனது காதலருடன் டாப்ஸி இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த காதலை தனது தாயார், சகோதரரி உட்பட தனது குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் .இந்த காதலை தாயாரும், சகோதரியும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்த காதலுக்கு அர்த்தம் இல்லை” என்றும் கூறியுள்ளார்.
ஆனால் டாப்ஸியின் தாயார், ‘டாப்ஸியை தாங்கள் முழுமையாக நம்புவதாகவும் அவர் யாரை தேர்வு செய்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்’ என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காதலருடன் நடிகை டாப்சிக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.