நீண்ட நாள் நட்பில் இருந்தனர் பாகுபலி ராணாவும் நம்மூரு திரிஷாவும்.!
ஊடகங்களுக்கு இருவருமே நல்ல தீனியாக இருந்தனர்.
“எனக்கு சென்னையில் திரிஷா இருக்கும் வீடு மட்டுமே தெரியும்”என்று ராணா டகுபதி சொல்லுவார்.
ஆனால் இவர்களது காதலுக்கு டகுபதியின் குடும்பத்தினர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆந்திராவில் மிகப்பெரிய குடும்பம். இதன் பின்னர் அனுஸ்கா உள்ளிட்ட சிலரை இணைத்துப் பேசினார்கள் ஆனால் அவை அத்தனையும் தவறானவை என்பதை ராணாவின் இன்றைய அறிவிப்பு தெளிவாக்கி இருக்கிறது.
ஹைதராபாத்தில் ‘டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோ ‘நடத்துகிற மிஹீகா பஜாஜ் என்கிற வட இந்திய பெண்ணை ராணா நெடுங்காலமாக காதலித்து வந்திருக்கிறார். இவர்களின் நட் புக்கு டகுபதி குடும்பமோ ,அக்கினேனி குடும்பமோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் “அவள் சம்மதித்துவிட்டாள்”என்பதாக காதலியின் படத்துடன் ராணா செய்திப் பதிவு செய்து விட்டார்.
வாழ்த்து செய்திகள் வந்து குவிகின்றன.