பிரதமர் மோடி பேசப் போகிறார் என்றதும் ,அவர் நாட்டுக்கு என்ன சொல்லப்போகிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக டி .வி பெட்டிகளின் முன்பாக எல்லாக் கட்சியினரும் எதிர்பார்ப்புகளுடன் உட்கார்ந்து கேட்டார்கள்.
பாஜகவினருக்கு மோடியின் பேச்சு அமிர்தமாக இருந்திருக்கும். இந்தியில் பேசியது அவர்களிலேயே எத்தனை பேருக்குப் புரிந்ததோ…! பல மொழிகள் பேசப்படுகிற நாட்டில் பொது மொழியான ஆங்கிலத்தில் பேசியிருக்கலாம்.
எதிர்க்கட்சியினருக்கு பிரதமரது பேச்சு வெற்றுச் சொம்பில் கோலிக்குண்டுவைப் போட்டு குலுக்கியதைப்போலத்தான் இருக்கும். அதுதானே எதிர்க்கட்சி.எங்கே கோட்டை விட்டிருக்கிறார் என்பதையே கவனித்திருப்பார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தருக்கு மிகுந்த ஏமாற்றம் போலும்.!
தமிங்கிலீஷில் “போங்கடா , என் சமையலையாவது நேரத்தில முடிச்சிருப்பேன் .டைம் வீணாப்போச்சு “என்று டிவிட்டரில் பதிவு செய்துவிட்டார் . பிரதமரின் பேச்சில் விஷயம் இல்லை என்பதை இப்படி நாசுக்காக சுட்டியிருந்தார்.
இதற்கு பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா என்பவர் குஷ்பூவுக்கு அட்வைஸ் பண்ணி பதில் டிவீட் போட்டிருக்கிறார்.

Yen ungallukku yeriyudhu?? Naa yengume pradhamar per sonne na?? Oh!! Since u know Hindi, “chor ki daadi mein tinka” ??? Go chill .. veyil adhigama irukku.. 👍🏻🙏🏻🤪🤪🤪🤪🤪🤪 n Tamizh yezhdhu padikka theriyum. adhukku I don’t have to prove myself to someone like u..Chalo vanakkam https://t.co/SQrGusQgRR
— KhushbuSundar ❤️ (@khushsundar) May 12, 2020