தொடக்கத்திலிருந்தே பிஜேபியை கடுமையாக விமர்சிப்பவர்களில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஒருவர்.
கர்நாடாகாவில் மக்கள் சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். உருப்படியாக விமர்சனம் செய்பவர் என்கிற பெயர் இவருக்கு இருக்கிறது .
நேற்று ( 12 ) இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார் .அதில் “கொரானாவுடன் போராடி உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டும் .நிச்சயம் வெற்றி பெறுவோம். 20 லட்சம் கோடியில் பொருளாதார சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் .அதை நிதி அமைச்சர் அறிவிப்பார்” என்பதாக சொல்லியிருந்தார்.
பிரதமரின் பேச்சுக்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.
அதில் ஒன்று பிரகாஷ் ராஜுடையது. சினிமா நடிகர் ,அரசியல் விமர்சகர் என்பதால் கவனிக்கப்பட்டது.
“இரவு 8 மணிக்கு ஒரு காலியான பாத்திரம் வெறுமனே அதிகமாக சத்தம் போட்டது” என்று சொல்லியிருந்தார்.
இதற்கு பதில் விமர்சனம் கடுமையுடன் இருந்தது .ஒரு டிவிட்டர் பதிவாளர் கருத்து .
“8.42 க்கு நாய் குரைக்கத் தொடங்கியது.