கண்ணுக்குள்ளே என்கிற தமிழ்ப்படம்தான் இவரது அறிமுகப்படம். திரை உலகில் கால் பதித்தவர் பின்னர் ராமர் ,சூரன் ,ஒருநாள் இரவில் ,திலகர் போன்ற தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து தமிழில் அவ்வளவாக ஆதரவு இல்லாததால் சொந்த மாநிலமான கேரளத்துக்குப் போய் விட்டார். அங்கு இன்று வரை அனுமோலும் ஒரு பிரபலம்.
இவரது பிரச்னையே வித்தியாசமாக இருக்கிறது.
சிலர் அவர்களுடைய அந்தரங்கப் போட்டோக்களை இவருக்கு அனுப்பி வைக்கிறார்களாம். அட பாவிகளா!
மனம் வெறுத்துப்போய் இருக்கிறார் அனுமோல்.!
“உங்களது அந்தரங்க போட்டோக்களை அனுப்புகிறவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நானும் ‘பிளாக்’செய்து தளர்ந்து விட்டேன் . ஆபாசப்படங்களைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கிறவர்கள் நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் சைபர் போலீஸ் கிரைமில் புகார் செய்ய வேண்டியதாகிவிடும். அருவருப்பான அயோக்கியர்கள்” என பதிவு செய்து இருக்கிறார்.
வக்கிரமனிதர்கள்.!