கோடை காலத்து குளிர் மழையாக நேற்று பெய்தது ராணா டகுபதியின் கல்யாணச்செய்தி .பாலிவுட் முதல் மல்லுவுட் வரையான நட்சத்திரங்கள் வாழ்த்துகளை சொல்லி திக்கு முக்காட வைத்து விட்டார்கள்.
ஆனால் டகுபதியுடன் சில காலம் டேட்டிங்கில் இருந்த திரிஷாவின் தரப்பில் இருந்து ஒரு செய்தி கூட வரவில்லை.
பாலிவுட் நடிகை சோனம்கபூருடன் மணமகள் மிகிஹா பஜாஜ் இருக்கிற படத்தை வெளியிட்டு ஆனந்த மழையில் நனைந்திருக்கிறார்.
“வாழ்த்துக்கள் டார்லிங் பேபி.!சரியான ஒருவரைத்தான் தேர்வு செய்திருக்கிறாய்.ராணா உன்னை மிகவும் சந்தோசமாக பார்த்துக்கொள்வார் .நல்ல மனிதர் ” என்பதாக பாராட்டியிருக்கிறார்.