அந்தக் காலத்தில் நையாண்டிப் புலவர்கள் இருந்தார்களாம். மன்னர்கள் ஏற்குமாறாக நடந்து கொள்கிறபோது நேரடியாக கண்டிக்காமல் மறைமுகமாக சுட்டிக்காட்டுவார்களாம். அதைப்போல மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும் குற்றம் சுமத்துவதிலும் ஒரு நாகரீகம்.
தமிழ்நாட்டில் கொரானா வேகமாகப் பரவி வருவதை அவர் எப்படிச்சுட்டிக் காட்டியிருக்கிறார் பாருங்கள்.!
“முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது.
கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது.
காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. #தாங்குமாதமிழகம்